முச்சந்தி

ஜனாதிபதித் தேர்தல் 2024; 17,140,354 வாக்காளர்கள் தகுதி

இலங்கையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு 17,140,354 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின்படி, ஒவ்வொரு தொகுதியிலும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 1,765,351 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 1,881,129 வாக்காளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 1,024,244 வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குருணாகல் மாவட்டத்தில் 1,417,226 வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்கிடுவதற்கு பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *