இந்தியா

பீகாரில் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி 15 பேர் பலி

இந்தியா, பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் பல இடங்களில் மின்னல் தாக்கத்துக்குள்ளாகி 15 பேர் பலியானதாக மாநில பேரிடர் மேலாண்மை தகவல் தெரிவித்துள்ளது.

பாட்னா, வைஷாலி ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் குறித்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 4 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 14 மற்றும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மழை, இடி,மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் முடியுமானவரை பொதுமக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *