ஒலிம்பிக்கில் தொடரும் சுவாரஸ்யம்: இன்றைய பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?
எதிர்பாரா திருப்பங்களுடன் இன்றைய ஒலிம்பிக் போட்டி விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில், இன்றைய பதக்க பட்டியலில் நேற்று முதலிடத்துக்கு முன்னேறிய ஜப்பான் இன்றும் அதை தக்கவைத்துள்ளது.
மேலும், 6 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் இடங்கலாக மொத்தம் 12 பதக்கங்களை வென்று முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
ஜிம்னாஸ்டிக், ஜுடோ, ஸ்கேட்போர்டிங் (Skateboarding), ஆகிய போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
தொடர்ந்து இரண்டாம் இடத்தில் 5 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 16 பதக்கங்களை வென்று ப்ரான்ஸ் 2ஆம் இடத்திலும் உள்ளது.
இதேவேளை, எல்லா ஒலிம்பிக் போட்டிகளிலும் முதன்மையாக காணப்படும் சீனா, இம்முறை சற்று தடுமாறி வருவதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. 5 தங்கம், 5 வெண்கலம், 2 வெள்ளி அடங்கலாக 12 பதக்கங்களை வென்று மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றது.
முறையே அவுஸ்திரேலியா 9 பதக்கங்களுடன் 4ஆம் இடத்திலும் கொரியா 9 பதக்கங்களுடன் 5ஆம் இடத்திலும் 20 பதக்கங்களை வென்று 6ஆம் இடத்திலும் உள்ளது.
இலங்கையின் நிலவரம்
நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான நீச்சல் போட்டியில் இலங்கை வீராங்கனை தெரிவு போட்டிகளில் பங்குபற்றி முதலிடம் பிடித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டபோதும் இலங்கை ஒருபதக்கத்தையும் நாட்டுக்கு பெற்றுத்தரமுடியவில்லை.
தற்போதைய பாரிஸ் ஒலிம்பிக்கில் ஏனைய போட்டியாளர்கள் காத்திருப்பு பட்டியலில் இருப்பதால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
![]()