இந்தியா

ஜம்மு – காஷ்மீர் தாக்குதல் – தீவிரவாதிகளின் வரைபடங்களை வெளியிட்ட பொலிஸார் !

இந்தியாவின் காஷ்மீரில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளின் வரைபடங்களை வெளியிட்ட ஜம்மு – காஷ்மீர் பொலிஸார், இந்திய மதிப்பில் தலா 15 இலட்சம் ரூபா பரிசையும் அறிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஜூன் மாதம் முதல் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கடந்த 16 ஆம் திகதி தோடா மாவட்டத்தில் இராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ள நிலையில், அவர்களின் உருவபடத்தை ஜம்மு காஷ்மீர் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் பற்றி தகவல் அளிக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள பொலிஸார், தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் இரகசியம் பேணப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *