ரஷ்ய இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது; பணியாளர்கள் அனைவரும் உயிரிழப்பு

Mi-28 இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதன் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் ஆதாரத்தை மேற்கோள் காட்டி TASS செய்திச் சேவை இதனை குறிப்பிட்டுள்ளது. “Mi-28 கலுகா பகுதியில் விபத்துக்குள்ளானதாகவும் யாரும் உயிர் பிழைக்கவில்லை எனவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் எல்லையில் இருந்து 150 கிலோமீட்டர் (93 மைல்) தொலைவில் உள்ள காட்டில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் TASS இடம் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *