சீனாவுக்குள் ஸ்டார்லிங்க் செயற்கைகோள் வந்தால் சுட்டு வீழ்த்தப்படும்
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கை கோள்களை லேசர் துப்பாக்கிகள் மூலம் சீனா சுட்டு வீழ்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் இரகசியங்களை எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் திருடினாலோ அல்லது சீனாவை சட்ட விரோதமாக கண்காணிக்க முயற்சித்தாலோ அவற்றை லேசர் துப்பாக்கிகள் மூலம் அழிக்கவுள்ளதாக பிரபல சீனப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக நீர்மூழ்கிக் கப்பல்கள் காத்திருக்கின்றன. அதாவது, சீன எல்லைக்குள் செயற்கைக் கோள்கள் வரும்வரை இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் காத்திருக்கும். அப்படி எல்லைக்குள் வந்தவுடன் ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் அனைத்தையும் நீர்மூழ்கிக் கப்பல்கள் சுட்டு வீழ்த்திவிடும்.
![]()