விண்டோஸின் ஐகானிக் புகைப்படம் பற்றி தெரியுமா?: தற்போது செழிப்பான திராட்சைத் தோட்டம்
உலகின் மிகவும் பிரபலமான புகைப்படங்களில் ஒன்றாக தற்போது வரை தனக்கென ஒரு தனியான இடத்தை பிடித்துள்ளது ‘Bliss’ என்ற புகைப்படமாகும்.
ஆரம்பக் கட்ட Windows XP திட்டத்தில் இயல்புநிலை ‘வால்பேப்பர்’ படமாக இது தேர்ந்தெடுக்கப்பட்டதன் விளைவாக Bliss பில்லியன் கணக்கான மக்களிடம் பிரபல்யமானது.
Bliss என்பது கலிபோர்னியாவின் லாஸ் கார்னெரோஸில் அமைந்துள்ள நீல வானம் மற்றும் பச்சை மலையைக் கொண்ட ஒரு எடிட் செய்யப்படாத புகைப்படமாகும்.
1996ஆம் ஆண்டு ஜனவரியில் நேஷனல் ஜியோகிராஃபிக் புகைப்படக் கலைஞர் சார்லஸ் ஓ’ரியரால் Mamiya RZ67 கமராவை பயன்படுத்தி இந்த புகைப்படத்தை எடுத்தார்.

இந்த சின்னமான இருப்பிடத்தின் காட்சி பல ஆண்டுகளுக்கு பின்னர் செழிப்பான திராட்சைத் தோட்டமாக மாறிவிட்டது.
2000ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் உரிமையை 100,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியது.
2001ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்ட Windows XP யில் வால்பேப்பராக இருந்த இந்தப் புகைப்படம் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை Windows இல் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
மைக்ரோசாப்ட் XPக்கான தங்கள் ஆதரவை நிறுத்தினாலும், பலர் இன்னும் Bliss புகைப்படுத்தை பயன்படுத்துகின்றனர்.
![]()