Google – பெயர் வந்தது எப்படி?; ருசிகர தகவல்
இன்று உலகத்தை இயக்கும் பெரிய சக்தியாக Google உருவெடுத்துள்ளது. ஏனெனில் நம்முடைய தேவை எதுவென்றாலும் அதற்கான தீர்வைக் கொடுப்பது Google தான்.
உலகை இயக்கும் சக்தியாக மாறியுள்ள கூகுள் 1997இல் தொடங்கப்பட்டது.
லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் என்ற இரண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் உலகின் தலைசிறந்த Search Engineயை அறிமுகப்படுத்தினர்.
Google-ன் உண்மையான பெயர் BackRub என்பது பிரபலமான மசாஜ் நுட்பத்தின் பெயர் மட்டுமல்ல, இதுதான் கூகுளின் உண்மையான பெயரும் கூட.

கூகுள் Google என்று அறியப்படுவதற்கு முன்பு, இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் தங்கள் Search Engine-க்கு பல்வேறு பெயர்களை சிந்தித்தனர்.
1996 இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்தபோது அவர்களின் ஆராய்ச்சி திட்டத்தின் பெயர் BackRub. அவர்களின் Search Engine-ன் ஆரம்ப பதிப்புகள் ஒரு வலைத்தளத்தின் பின்னிணைப்புகளை அதன் முக்கியத்துவத்தை தீர்மானிக்க பகுப்பாய்வு செய்தன, அதனால்தான் BackRub என்று பெயரிடப்பட்டது.
ஒரு வருடம் கழித்து, Google க்கான டொமைன் பதிவு செய்யப்பட்டது.
Google என்பது தற்போது மிகவும் பரிட்சயமான மற்றும் கவர்ச்சியான பெயராக தோன்றினாலும், உண்மையில் இது தவறாக தட்டச்சு செய்யப்பட்ட பெயராகும்.
Googol என்பதன் அர்த்தம் ‘நூறு பூஜ்ஜியங்களுடன் ஒன்று’ என்ற கணிதக் கருத்தைக் குறிக்கிறது.
இது அனைத்துத் தகவல்களும் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்யும் நிறுவனத்தின் இலக்கைக் குறிக்கிறது.
Google-ன் விரிவாக்கம்
கூகுளின் விரிவாக்கம் என்னவெனில் Google is the Global Organization of Oriented Group Language of Earth. கூகுளின் முதல் அலுவலகம் சாண்டா மார்கரிட்டா அவேயில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கேரேஜ் ஆகும் என்பதும் பலர் அறியாத சுவாரஷ்யம்.
![]()