இந்தியா

வறுமை ஒழிப்பு: இந்தியாவில் தமிழகம் முதலிடம்

இந்தியாவில் வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது என நிடி ஆயோக் தெரிவித்துள்ளது.

இது குறித்து ‘நிடி ஆயோக்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023-24ஆம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் 78 புள்ளிகளுடன் தமிழகம் 3ஆம் இடத்தில் உள்ளது. வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் 81 புள்ளிகளுடன் தமிழகம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. மொத்தமுள்ள 16 இலக்குகளில் 15 இலக்குகளில் 65 புள்ளிகளுக்கு மேல் பெற்று front Runner பிரிவில் தமிழகம் இடம்பிடித்துள்ளது.

தரமான கல்வி இலக்கில் 76 புள்ளிகளுடன் தமிழகம் 4ஆம் இடத்தில் உள்ளது.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *