இந்தியா

அசாம் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கன மழை;78 பேர் பலி, தொடரும் அபாய எச்சரிக்கை

இந்தியாவில் தொடர்ந்தும் பல மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன்படி புதுடில்லியில் கடந்த வாரம் பெய்த கன மழையினால் பல பேர் பாதிப்புக்குள்ளாகினர்.

தற்சமயம் அசாமில் கொட்டித் தீர்த்த கன மழையினால், அம் மாநிலத்தில் 27 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் சுமார் 74ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழையின் காரணமாக ஏற்கனவே 70 பேர் பலியாகியுள்ள நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக அசாம் மாநிலத்தில் மழையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் 269 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிரம்மபுத்ரா நதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவைத் தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *