தோளில் இருந்து கையை எடுக்குமாறு விஜயிடம் கோரிய மாணவி?; சர்ச்சையை கிளப்பிய காணொளி
இந்தியா – சென்னையில் அண்மையில் நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்திருந்தார்.
இந்த நிகழ்வின் காணொளி ஒன்று இணையத்தளத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
நிகழ்வில் கலந்துகொண்ட மாணவி ஒருவர், தன் தோளில் இருந்து கையை எடுக்குமாறு விஜயிடம் கேட்டுக்கொண்டமை குறித்த காணொளியில் பதிவாகியிருந்தது.
இந்த நிகழ்வை எக்ஸ் தளத்தில் பதிவேற்றிய சிலர், மாணவியின் உறுதியான செயற்பாட்டை பாராட்டியுள்ளனர்.
அதேநேரம், இந்த காணொளி திரிபு படுத்தப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளதாக சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அத்துடன், இந்த காணொளி தொடர்பில் உண்மைத் தன்மையினையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
![]()