விஜய்க்கு முட்டி போட்டு ப்ரோபோஸ் செய்த குட்டி ரசிகை; க்யூட் எக்ஸ்பிரஷன் கொடுத்த தளபதி

நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை சட்டமன்ற வாரியாகப் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகின்றார்.
கடந்த ஜூன் 28ஆம் திகதி முதற்கட்டமாக வழங்கிய நிலையில், அதாவது ஜூலை 3ஆம் திகதி இரண்டாம் கட்டமாக வழங்கினார்.
விஜய் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கி வந்தபோது அனைவரும் ரசிக்கும்படியான நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
அதாவது மாணவி ஒருவருடன் வந்த குழந்தை விஜய்க்கு கொடுப்பதற்காக கையில் பூவுடன் மேடைக்கு வந்துள்ளார்.
விஜய்க்கு அருகில் சென்றதும், காதலர் தனது காதலுக்குரியவருக்கு முட்டி போட்டு காதலைச் சொல்வதைப் போல் முட்டி போட்டார்.
இதனைப் பார்த்த விஜய் ஆச்சரியப்பட்டது மட்டும் இல்லாமல் சிரித்தும் விட்டு, தனது விரலை ஆட்டி செல்லமாக மிரட்டிக் கொண்டும் ஒரு எக்ஸ்பிரஷன் கொடுத்தார்.
இதனைப் பார்த்துக் கொண்டு இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளும் மாணவ மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் ஆரவாரம் செய்ய விஜய், குழந்தையிடம் இருந்து பூவை வாங்கிக் கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.
.jpg?format=webp&w=1000&q=80)



![]()