இந்தியா

வெற்றி கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு விருந்து கொடுத்து அசத்திய மோடி

வெற்றி கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர் மோடி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பரபரப்பான போட்டியின் முடிவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

கோப்பை வென்ற பிறகு இந்திய வீரர்கள், பயிற்சியாளர் டிராவிட் உள்ளிட்ட பலரும் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை.

இதனால் கடுமையான விமர்சனங்களைப் பெற்ற இந்திய அணிக்கு இந்த வெற்றி பெறும் ஆறுதலாக அமைந்துள்ளது.

ரோஹித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அவர்கள் வெற்றிக் கோப்பையோடு செல்வது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது.

இந்திய அணிக்கு பிசிசிஐ 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பை வெற்றியை தாய்நாட்டில் கொண்டாட வேண்டுமென்ற வீரர்களின் ஆசையை இயற்கை சீற்றம் தடுத்தம்.

அவர்கள் தங்கியிருந்த பார்படாஸ் பகுதியில் பெரில் புயல் வீசியதால் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் 2 நாட்கள் தாமதத்துக்குப் பிறகு இன்று அதிகாலை வீரர்கள் மும்பை விமான நிலையத்தினை வந்தடைந்தனர்.

அதன் பிறகு 11.00 மணியளவில் இந்திய அணி வீரர்கள் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தனர்.

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.

இது குறித்த காணொளிகள் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *