இந்தியா

விஜய் – த்ரிஷா, எம்ஜிஆர்-ஜெயலலிதாவா?: சர்ச்சைகளை ஏற்படுத்திய சுசித்ரா

தென்னிந்திய நடிகர்களாக விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோரை எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பின்னணி பாடகி சுசித்ரா பேசிய விவகாரம் தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், லிப்ட் ஒன்றினுள் விஜயுடன் இருக்கும் புகைப்பட்டத்தை வெளியிட்ட த்ரிஷா அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்தப் படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்நிலையில், குறித்த புகை்கப்படம் தொடர்பில் சுசித்ரா கருத்து வெளியிடுகையில்,

““விஜய் அவருடைய குடும்பத்துடன் மீண்டும் ஒன்று சேர வேண்டும். ஒரு சின்ன சண்டைல பிரிஞ்சி போன குடும்பத்தை விஜய் இன்னும் சேர்த்து வைக்காததாலதான் இந்த மாதிரி ஒட்டுண்ணிலாம்(த்ரிஷா) உள்ள நுழையுதுங்க.

லிப்ட்ல கமுக்குமா எடுத்த போட்டோல இருந்தே த்ரிஷா அவரை எவ்வளவு சொந்தம் கொண்டாடறாங்கன்னு தெரியுது. பல பேர் எம்ஜிஆர், ஜெயலலிதான்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க.

அப்பவே, என்ன சொன்னோம், ஜெயலலிதா வந்து எம்ஜிஆருக்கு ஒரு ஒட்டுண்ணி தான். எம்ஜிஆர் கிட்ட இருந்து எல்லா அரசியலையும் கத்துக்கிட்டு அப்புறம் எம்ஜிஆரையே ஒதுக்கிட்டாங்க.

இந்த ஒரு வருத்தம் கருணாநிதி தாத்தா கிட்ட கூட இருந்துச்சி. ஜெயலலிதா அவருடைய நண்பரை இப்படி பண்ணிட்டாங்கன்னு அவரு அப்செட் ஆனாரு.

எம்ஜிஆர் மரணத்துக்கு அப்புறம் ஜெயலலிதா நல்லா அரசியல் பண்ணாங்க. ஆனால் எதுவும் பெருசா பண்ணல, பல விஷயங்கள் ஆரம்பிச்சி நின்னு போச்சு.

நல்ல பேர் வாங்கறதுக்கு நிறைய பண்ணிட்டிருந்தாங்க. அந்த ஒரு அரசியல் கிராப்பை இப்படி ஈ அடிச்சான் காப்பி மாதிரி பாலோ பண்ணக் கூடாது.

இதெல்லாம் ஜெயிக்கிறதுக்கான வழியும் இல்ல. இதுவரை எந்த சமுதாய பொறுப்பையும் வெளிப்படுத்தாதவர் விஜய். யார் இவருக்கு இப்படி தப்பான அறிவுரை எல்லாம் சொல்றாங்கனு தெரியல,” என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *