‘ராட்சசன்’ திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்: மீண்டும் கிறிஸ்டோஃபரா?

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விறுவிறுப்பான கதைக்களத்துடன் நொடிக்கு நொடி பதற வைக்கும் காட்சிகளுடன் படத்தின் கதை நகரும்.

சஸ்பன்ஸ் த்ரில்லர் ஜோனரில் உருவாகிய இத் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படங்களில் ஒன்று என கூறினால்கூட அதில் தவறில்லை.

ராட்சசன் திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இயக்குநர் ராம் குமாருடன் விஷ்ணு விஷால் கைகோர்த்துள்ளார்.

சத்ய ஜோதி தியாகராஜன் தயாரிக்கும் இத் திரைப்படம், Fantasy கதைப்பாணியில் உருவாகிறது எனக் கூறினாலும், தற்போது ராட்சசன் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.

அதாவது இத் திரைப்படம் ராட்சசன் இரண்டாம் பாகமாக உருவாகிறதாம்.

இது இரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் கூட உண்மைக்கும் இது இரண்டாம் பாகமா என்பது தெரியவில்லை.

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button