விரைவில் மக்களை சந்திக்கிறார் ‘ஒத்த ஓட்டு முத்தையா’

நடிகர் கவுண்டமணி, கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’. இதில் யோகி பாபு, ரவிமரியா, ராஜேந்திரன், வையாபுரி, சிங்கமுத்து, வாசன் கார்த்திக், நாகேஷின் பேரன் கஜேஷ், ராஜேஷ்வரி உட்பட பலர் நடித்துள்ளனர்.

அரசியல் நையாண்டியாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை சாய் ராஜ கோபால் இயக்கியுள்ளார். இவர், ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘கிச்சா வயசு 16′ படங்களை இயக்கியவர். சுமார் 70 படங்களில் கவுண்டமணி- செந்திலுக்காக நகைச்சுவை பகுதி எழுதியவர். சினி கிராப்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவிராஜா தயாரித்துள்ளார். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், பதவியேற்பு விழா என்னும் வாசகத்தோடு, மிக விரைவில் பொதுமக்களையும் சந்திக்க உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

இதில், அரசியல் கட்சி சார்பாகத் தேர்தலில் நின்று ஒரு ஓட்டில் தோற்கும் கவுண்டமணி, இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து யோகிபாபு போட்டியிட, யார் வெல்கிறார்கள் என்பது கதை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button