வெளியீட்டுக்கு தயாராகும் ரஜினியின் ‘வேட்டையன்’

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் கூட்டணியில் உருவான ஜெயிலர் திரைப்படம் இரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியாவும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து ரஜினியின் 170 ஆவது படமாக வேட்டையன் திரைப்படம் அமைகின்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் இருக்கின்றது.

ஜெய் பீம் படத்திற்குப் பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கி வரும் இந்தப் படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் ரஜினியைத் தவிர அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், வேட்டையன் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வெளியாகுமென படக்குழுவினால் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, இந்தப் படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் தொடர்பான அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று நம்பப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button