ஈழத்தமிழர்களை எடுப்பார் கைப்பிள்ளையாக பயன்படுத்த நினைக்கும் சிங்கள தலைவர்கள் : சிறீதரன் காட்டம்

சிங்களத் தலைவர்கள், ஈழத்தமிழர்களை எடுப்பார் கைப்பிள்ளைகளாக பயன்படுத்த நினைக்கும் மனோநிலையிலிருந்து வெளிவராத வரை இந்த நாட்டில் இன நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்பவைக்கு சாத்தியமே இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை இன்றைய தினம் (26) கெளதாரிமுனை மக்களைச் சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும் அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை அதிகாரபூர்வமாக வழங்குவதற்குரிய சந்தர்ப்பங்களை தமிழ்மக்கள், சிங்களத் தலைவர்களுக்கு பலமுறை வழங்கியிருந்தும் அவர்கள் அவற்றை சரிவரப் பயன்படுத்த முன்வராமைக்கு இனமேலாதிக்க மனோநிலையே காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் தேர்தல்

இதனுடன், அதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மாத்திரம் விதிவிலக்கல்ல என  சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளதுடன் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இதனை மேற்கோள்காட்டி கருத்துரைத்த சிறிதரன், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் எவரும் தயாரில்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *