இந்தியா – சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடி பேட்டி

இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்”, எனப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நியூஸ்விக் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவைப் பொறுத்தவரை சீனா உடனான உறவு முக்கியமானது. இரு தரப்பு உறவில் உள்ள அசாதாரணத்தை பின்னுக்கு தள்ள, நமது எல்லையில் நீடித்து வரும் பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும் என நான் நம்புகிறேன்.
இந்தியா சீனா இடையே நிலையான மற்றும் அமைதியான உறவுஇரு நாடுகளுக்கு மட்டும் முக்கியமானது அல்ல. ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும், உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. ராஜதந்திர மற்றும் ராணுவ மட்டங்களில் நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான இருதரப்பு ஈடுபாட்டின் மூலம் நமது எல்லைகளில் அமைதியை மீட்டெடுக்கவும், நிலைநிறுத்தவும் முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு அந்த பேட்டியில் பிரதமர் மோடி கூறினார்.
![]()