சண்டைக்குத் தயார் : எலோனின் சவாலை ஏற்ற மார்க்

கூண்டுக்குள் நேருக்குநேர் சண்டையிடத்தயாரா? என செல்வந்தரும் டுவிட்டரின்  உரிமையாளருமான எலான் மஸ்க் விடுத்த சவாலுக்கு,    மெட்டா நிறுவனத்தின்  தலைமை செயற்பாட்டு அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க், சம்மதம் தெரிவித்துள்ளார்.

மேலும் ”மோதலுக்கான இருப்பிடத்தை அனுப்பவும்”  எனவும் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் அவர்  பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில்  ”அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் தற்காப்பு கலை வீரர்கள் போட்டியிடும் ”Vegas Octagon” என்ற இடத்தில் மோதலை வைத்துக் கொள்ளலாம் என மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளமை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டுவிட்டர் பயனர்களின் நிலைமை குறித்து ஸக்கர்பெர்க் தெரிவித்திருந்த கருத்தைக் கேலி செய்து, மஸ்க் ட்வீட் செய்திருந்தமையே இம்மோதலுக்கான காரணமாகக் கூறப்படுகின்றது.

51 வயதான மஸ்க், கராத்தே, டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளில் சிறுவயதில் இருந்தே பயிற்சி பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அதேசமயம்  தற்காப்பு கலை வீரரான 39 வயதான  ஸக்கர்பெர்க், அண்மையில்நடைபெற்ற  ஜியு-ஜிட்சு போட்டியில் வெற்றிபெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button