ஆண்கள் முக ஒப்பனை அணியலாம்…பெண்கள் high heels அணியத் தேவையில்லை – Qantas
ஆண்கள் முக ஒப்பனை அணியலாம்…பெண்கள் தூக்குக் காலணிகளை (high heels) அணியத் தேவையில்லை…
ஆஸ்திரேலியாவின் தேசிய விமானச் சேவை நிறுவனமான Qantas சிப்பந்திகளுக்கான வழிகாட்டிகளை மாற்றியமைத்துள்ளது.
நவீனகால எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவும் வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த ஊழியர்களை உள்ளடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
குறிப்பிட்ட சிலவகை மீசைகளுக்கு மட்டுமே அனுமதி…கண்களுக்குப் பயன்படுத்தப்படும் eyeliner-க்குச் சில வண்ணங்கள் மட்டுமே அனுமதி…
என Qantas நிறுவனம் பொதுவாகச் சிப்பந்திகளுக்குக் கடுமையான விதிமுறைகளை வைத்திருப்பதுண்டு.
அத்தகைய விதிமுறைகளை அகற்றும்படி தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.
அதற்கேற்ப பாலினம் சார்ந்த சீருடை விதிமுறைகள் இனி தேவையில்லை என்று Qantas கூறியுள்ளது.
![]()