ஜப்பானை இலவசமாகச் சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு!
ஜப்பானின் தேசியப் பயணத்துறை அமைப்பு, இவ்வாண்டுப் பிற்பகுதியில் ஜப்பானுக்கு இலவசப் பயணங்களை ஏற்பாடு செய்கிறது.
உங்கள் அன்புக்குரியவரின் பிறந்த நாளை அங்கு கொண்டாட வசதிகள் செய்து தரப்படும்.
ஹொக்காய்டோ (Hokkaido), ஹிரோஷிமா (Hiroshima), சன்-னின் (San’in) ஆகிய இடங்களுக்கு நீங்கள் பயணம் செய்யலாம்…
விமானப் பயணச்சீட்டுகள், தங்குமிடம், போக்குவரத்து, உணவு அனைத்துமே இலவசம்!
தேர்ந்தெடுக்கப்படுவோர் சொந்தப் பயண நிரலை அமைத்துக்கொள்ளலாம்.
திட்டத்துக்குச் சிங்கப்பூர்வாசிகள் தகுதி பெறுவர்.
பயணக் குழுவில் குறைந்தது ஒருவராவது சிங்கப்பூரராக இருக்க வேண்டும்.
அதோடு JbyJ இணையத்தளத்தில் உறுப்பினராகச் சேர வேண்டும்.
பதிவு இலவசம்.
ஜூன் 18ஆம் தேதி வரை திட்டத்துக்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும் ஆங்கிலத்தில் 3 நிமிடக் காணொளியைத் தயாரித்து அனுப்ப வேண்டும் என்றும் ஜப்பானின் தேசியப் பயணத்துறை அமைப்பு குறிப்பிட்டது.
காணொளியில் யாருடைய பிறந்தநாளைக் கொண்டாட விரும்புகிறீர்கள், ஜப்பான் ஏன் அதற்குச் சிறந்த இடமாக அமையும் என நினைக்கிறீர்கள், பயணத்தின்போது நீங்கள் மேற்கொள்ள விரும்பும் நடவடிக்கைகள் யாவை ஆகிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படுவோர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
![]()