234 தொகுதி மாணவ மாணவிகளை சந்திக்கும் விஜய்!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 234 தொகுதிகளிலும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 1500 மாணவ மாணவிகளை நடிகர் விஜய் ஜூன் இரண்டாம் வாரத்தில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
அதேபோல் பெற்றோரை இழந்த சூழ்நிலையிலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களையும் அவர் சந்திக்க இருப்பதாகவும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களின் அடுத்த கட்ட படிப்பிற்கு தேவையான ஊக்க தொகையை அவர் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button