ரணிலின் சாதனையை முறியடித்த ஜீவன் தொண்டமான்

தனது சாதனையை இளம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இளம் அமைச்சராக தான் சில பணிகளை நிறைவுசெய்ததாகவும், இந்தச் சாதனையை தற்போது தன்னைவிட இளம் வயதில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்து, இளம் அமைச்சருக்கான சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கேகாலை, அரநாயக்க நீர் விநியோகத் திட்டம் அதிபரால் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இளம் அமைச்சர் என்ற பெருமை

இந்த நாட்டிலேயே இளம் அமைச்சர் என்ற பெருமையை ஜீவன் தொண்டமான் பெற்றுள்ளார். அதற்கு முன்னர் நான் தான் அந்தச் சாதனைக்கு உரிமையாளனாக இருந்தேன்.

தற்போது அந்தச் சாதனையை ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளார். இளம் தலைமுறையினர் இவ்வாறு முன்வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button