சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

டாக்டர், டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அயலான் படத்தின் ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். அயலான் படத்தில் 4500-க்கும் அதிகமான விஎப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் படம் முழுவதும் ஏலியன் கதாப்பாத்திரம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயலானுடன் கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்ல தயராகுங்கள் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button