கட்சி துவங்குவது எப்போது? நடிகர் விஜய் தீவிர ஆலோசனை!…

புதுக் கட்சி எப்போது துவக்குவது என, நடிகர் விஜய் ஆலோசனை நடத்துவதாக தகவல் பரவி வருகிறது.

கடந்த ஆண்டு நடந்த ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சில இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து, கட்சி துவக்குவது குறித்து, தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம், விஜய் கருத்து கேட்டார்.

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ‘மாஜி’ எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அரசியல் புள்ளிகள், ஊடகவியலாளர்கள் சிலரிடமும் ஆலோசனை கேட்டார்.

வாரிசு படம் வெளியிட தியேட்டர்கள் கிடைக்காத விவகாரத்தால், ஆளும் கட்சி புள்ளியுடன் விஜய்க்கு ஏற்பட்ட பனிப்போர் இன்னமும் தொடருகிறது.

லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை, விஜய் ரகசியமாக சந்தித்து பேசியதாக, தகவல் வெளியானது.

விஜய் தரப்பில் மறுக்கப்பட்ட போதிலும், விஜய் குடும்பத்தைச் சேர்ந்த தொழிலதிபர், புதுச்சேரி மாநில முக்கிய புள்ளி ஒருவரை சந்தித்து, கட்சி துவக்குவது குறித்து பேச்சு நடத்திஉள்ளார்.

வரும் ஜூலைக்குள் விஜய் கட்சி துவக்குவார்; லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுவார்; புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மத்தியில் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், கட்சி துவங்குவதை தள்ளிப் போடலாமா என்ற யோசனையும் விஜய்க்கு இருப்பதாக தெரிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button