“உக்ரேன் அணுவாயுதங்களை அமெரிக்காவிலிருந்து பெற்றால் அது நாட்டு மக்களின் எதிர்காலத்துடன் சூதாடுவதற்குச் சமம்!”

உக்ரேனிற்கு அணுவாயுதங்களைக் கொண்டிருக்கும் ஆசை இருப்பதாக வடகொரியா குற்றஞ்சாட்டியிருக்கிறது.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் தங்கை கிம் யோ ஜொங் (Kim Yo Jong) அவ்வாறு குறைகூறினார்.

உக்ரேனின் அதிபர் அலுவலக இணையப்பக்கத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனுவை அவர் மேற்கோள் காட்டினார்.

அதில் கீவ் அணுவாயுதங்களைச் சேகரித்து வைக்கவேண்டும் அல்லது சொந்தமாகத் தயாரிக்கவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

திருவாட்டி கிம்மின் குற்றச்சாட்டை வடகொரிய அரசாங்க ஊடகமான KCNA வெளியிட்டது.

மனுவைப் பொதுமக்கள் தாக்கல் செய்திருந்தாலும் அது உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) நிர்வாகத்தின் அரசியல் சூழ்ச்சி என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம் என்றார் அவர்.

அமெரிக்காவின் அணுவாயுதங்கள் உக்ரேனிற்குள்  கொண்டுவரப்பட்டால் அல்லது கீவ் அவற்றைச் சொந்தமாக தயாரித்தால் திரு. ஸெலென்ஸ்கி நாடு, நாட்டு மக்களின் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதற்குச் சமம் என்றார் திருவாட்டி கிம்.

நேற்றைய நிலவரப்படி மனுவில் ஆயிரத்துக்கும் குறைவான கையொப்பங்கள் இருந்தன.

25,000 பேர் கையெழுத்திட்டால் திரு. ஸெலென்ஸ்கி கருத்து தெரிவிக்கவேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button