இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியை காண இன்று சேப்பாக்கம் வரும் ரசிகர்களுக்கு இலவச மினிபஸ் வசதி!

இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது. போட்டிக்காக ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியை காண வரும்.ரசிகர்களுக்கு இலவச மினி பஸ் வசதி வழக்கப்பட்டுள்ளது . அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை போட்டி முடியும் வரை இலவச மினி பஸ் சேவை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, நெரிசல் மிகுந்த நேரத்தில் வழங்கப்படும் மெட்ரோரெயில் சேவை வழக்கமான நாட்களில் மாலை 5 முதல் இரவு 8 வரைஇருக்கும். இந்த சேவை இன்று மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படவுள்ளது என்று சென்னைமெட்ரோ ரெயில் நிறுவன செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button