கல்யாணக் கொண்டாட்டம்! விமானச்சீட்டுகள் அனைத்தையும் வாங்கி மொத்தக் குடும்பத்துடன் புறப்பட்டார் மாப்பிள்ளை…

இந்தியாவைச் சேர்ந்த புவன் (Bhuwan) அவருடைய திருமணத்தை முன்னிட்டு விமானச்சீட்டுகள் அனைத்தையும் வாங்கிக் கூட்டுக் குடும்பத்துடன் பயணம் மேற்கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

அவர் குடும்பத்துடன் புறப்படும் காணொளியை The Shubh Wedding எனும் Instagram பக்கத்தில் பகிர்ந்ததாக India Today கூறியது.

அதில் மணமகள் ஷகுனை (Shagun) வீட்டிற்கு வரவழைக்க மாப்பிள்ளை வீட்டார் புறப்படுவதாக அவர் பதிவு செய்திருந்தார்.

கையில் மருதாணியுடன் முகத்தில் புன்சிரிப்புடன் காணப்பட்டார் புவன்.

அவருடன் அவரது குடும்பத்தினரும் உற்சாகமாகக் காணப்பட்டனர்.

தம்பதியின் திருமணம் கோலாகலமாக நிறைவடைந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button