மைக்கல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் திரைப்படத்தில் அவரின் அண்ணன் மகன் நடிக்கிறார்

மைக்கல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு ‘மைக்கல்” என்ற திரைப்படமாக வெளிவரவுள்ளது.

அதில் அவருடைய அண்ணன் ஜெர்மெய்ன் ஜாக்சனின் (Jermaine Jackson) மகன், 26 வயது ஜாஃபார் ஜாக்சன் (Jaafar Jackson) மைக்கல் ஜாக்சனின் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக Lionsgate studio இன்று (31 ஜனவரி) தெரிவித்தது.

படத்தின் தயாரிப்புப் பணிகள் இவ்வாண்டு தொடங்கவிருக்கின்றன.

அதை எண்டொயின் ஃபுகுவா (Antoine Fuqua) இயக்க, கிரஹம் கிங் (Graham King) தயாரிக்கிறார்.

இருவரும் ஜாஃபார் ஜாக்சனுக்கு மைக்கல் ஜாக்சனைப்போல நடிக்கும் இயல்பான திறன் உள்ளது என்று கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button