சவுதி அரேபியாவில் ஒட்டகங்களுக்கென ஹோட்டல்
சவுதி அரேபியத் தலைநகர் ரியாதில் (Riyadh)
ஒட்டகங்களுக்கென ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது.
ஒட்டகங்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அங்கு செய்துதரப்படுகின்றன.
ஒட்டகம் வைத்திருப்போர் தங்களது அன்றாட வேலை காரணமாக அல்லது வெளியூர் பயணங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தால் ஒட்டகங்களை இந்த ஹோட்டலில் விட்டுச்செல்லலாம்.
ஹோட்டலின் பெயர் ‘Tatemman’. 480 அறைகள் உள்ளன. ஓர் இரவுக்கான விலை 400 ரியால் (140 வெள்ளி).
100 ரியால் (35 வெள்ளி) கூடுதல் கட்டணம் செலுத்தினால் ஒட்டகங்களுக்குச் சூடான பாலும் வழங்கப்படும்.
ஒட்டகங்களின் உடல்நலம் முன்கூட்டியே சோதிக்கப்படுகிறது. பிறகுதான் அவை அந்த ஹோட்டலில் தங்கவைக்க அனுமதிக்கப்படுகின்றன.
![]()