தெருக்களைப் புகைப்படம் எடுத்து கூகுளில் பணம் ஈட்டலாம் தெரியுமா?…

புகைப்பட ஆர்வலர்கள் பலர் உலகம் முழுக்க குவிந்து கிடக்கின்றனர். 360 டிகிரி கேமராக்கள் கொண்டு தற்போது புகைப்பட நிபுணர்கள் யூடியூப் உள்ளிட்ட தளங்களில் விலாக் பதிவேற்றுகின்றனர். இவற்றுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைக்கிறது. நீங்கள் 360 டிகிரி கேமரா வைத்துள்ள புகைப்பட நிபுணர் என்றால் கூகுளின் உதவியுடன் அதிக தொகை ஈட்ட முடியும் தெரியுமா? எப்படி எனப் பார்ப்போம். ‘கூகுள் ஸ்ட்ரீட் வியூ’ தொழில் தற்போது கூகுள் நிறுவனத்தின் லாபகரமான தொழிலாக வளர்ந்து வருகிறது. இந்தத் தொழில் மேம்பட உலகம் முழுக்க உள்ள உள்ளூர் புகைப்பட நிபுணர்களே காரணம். இவர்களே இந்தப் புகைப்படங்கள் எடுக்கப் பயன்படுத்தப்படுகின்றனர். கூகுளின் ஸ்ட்ரீட் புகைப்படக் கலைஞர் ஆக என்னென்ன செய்யவேண்டும் எனப் பார்ப்போமா?

நீங்கள் 360 டிகிரி கேமரா வைத்திருக்க வேண்டும். இந்த கேமரா கொண்டு உங்கள் தெரு முழுவதும் நீங்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து 50 புகைப்படங்கள் எடுக்கவேண்டும். இவற்றை கூகுள் தளத்தில் நீங்கள் பதிவேற்றி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவேண்டும். எப்படியும் புகைப்படங்கள் எடுத்து அனுப்ப ஒரு மாத காலம் ஆகலாம். உங்கள் புகைப்படங்கள் கூகுள் தலைமையால் பரிசீலிக்கப்படும். உங்கள் கேமரா கோணம், ஒளி அளவு, கலைநயம் உள்ளிட்டவை அவர்களுக்குப் பிடித்திருந்தால் நீங்கள் கூகுளின் ட்ரஸ்டட் புகைப்பட நிபுணராக அங்கீகரிக்கப்படுவீர்கள். இதற்கான பேட்ச் உங்களுக்கு வழங்கப்படும்.

நகரின் முக்கியப் பகுதிகளில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் கூகுள் மேப் செயலியில் தங்கள் கடையின் பெயர் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற ஆவலாக இருப்பர். இதற்காக இவர்கள் கூகுளை அணுகுவர். கூகுள் இதற்காக இவர்களிடம் இருந்து ஒரு தொகையை கட்டணமாக வசூலிக்கும். பின்னர் ஒரு கடை உரிமையாளருக்கு ஒரு டிரஸ்டட் புகைப்பட நிபுணரை நியமிக்கும். அவர் கடை உரிமையாளரைத் தொடர்புகொண்டு கடைக்கு வந்து கடையை பல கோணங்களில் புகைப்படமெடுத்து கூகுளிடம் சமர்ப்பிப்பார். இந்த சேவைக்காக டிரஸ்டட் புகைப்பட நிபுணருக்கு கடை உரிமையாளர் ஒரு தொகையை கட்டணமாக அளிக்கவேண்டும். பின்னர் கூகுள் மேப் செயலியில் கடையின் பெயர், முகவரி, புகைப்படங்கள், ஸ்டார் ரேட்டிங், கருத்துப் பதிவு ஆப்ஷன் உள்ளிட்டவை கூகுள் புரோக்ராமர்களால் பதிவிடப்படும்.

கூகுள் மேப்பில் இவ்வாறு இடம்பிடித்துவிட்ட கடைகளைத் தேடி பல வாடிக்கையாளர்கள் வந்து குவிவர். இதனால் கடையின் லாபம் பெருகும். இந்தத் தொழிலில் கூகுள் நிறுவனம் கடை உரிமையாளருக்கும், டிரஸ்டட் புகைப்பட நிபுணருக்கும் இடையே கமிஷன் வாங்கி சேவையாற்றும் இடைத்தரகர் போல செயல்படுவதை நீங்கள் உணர முடியும். இதனால் கூகுள், புகைப்பட நிபுணர், கடை உரிமையாளர் என மூவருக்குமே லாபம் கிடைக்கும். கூகுளின் இந்த புகைப்படத் தொழில் தற்போது இந்நிறுவனத்துக்கு அதிக லாபம் ஈட்டித்தரும் தொழிலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button