உக்ரேனிய சிப்பாயின் நெஞ்சிலிருந்து வெடிக்காத கிரனேட் அகற்றப்பட்டது

உக்ரேனிய  சிப்பாய் ஒருவரின் நெஞ்சுக்குள்ளிருந்து, வெடிக்காத கிரனேட்   ஒன்றை அந்நாட்டு மருத்துவர்கள் சத்திர­சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். சிப்பாயின் இதயத்துக்கு அருகில் இந்த கிரனேட் சிக்கியிருந்தது.

இந்த கிரனேட்  எந்த வேளையிலும் வெடிக்­கும் அபாயம் இருந்ததால், இரத்தம் வெளியேறுவதை மின்சாரத்தால் கட்டுப்­படுத்துவதை தவிர்த்து இச்சத்திரசிகிச்சை செய்யப்பட்டதாக உக்ரேனிய இராணுவ மருத்துவர்களின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய பாதுகாப்புப் படைகளின் மிகுந்த அனுபவமுள்ள சத்திரசிகிச்சை நிபுணர் மேஜர் ஜெனரால் அன்ட்றே வேர்பா தலையில் இசத்சத்திரசிகிச்சை மேற்­கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்­பட்டுள்ளது.

இராணுவப் பொறியியலாளர்கள் இருவரும் சத்திரசிகிச்சை அறையில் பாதுகாப்புக்காக இருந்தனர்.

சிப்பாயின் உடலிலிருந்து அகற்றப்பட்ட கிரனேட் ட் பின்னர் கட்டுப்பாட்டு முறையில் வெடிக்கச் செய்யப்பட்டது.

இந்த கிரனேட்  எவ்வாறு மேற்படி சிப்பாயின் உடலில் புகுந்து என்பது தெரி­விக்கப்படவில்லை.  எனினும், 4 சென்ரி­மீற்றர் நீளமான இந்த கிரனேட் , 400 மீற்றர் தூரத்திலிருந்தும் ஏவப்படக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button