லால் சலாம் படத்துக்கு கெட்டப் மாற்றப் போகும் ரஜினி!

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் ஒரு இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யா இயக்கும் புதிய படமான லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகன்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் கடைசியாக குசேலன் மற்றும் ரா ஒன் ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் பாட்ஷா படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் ஒரு இஸ்லாமிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக ஜெயிலர் ஷூட்டிங் முடிந்ததும் ரஜினிகாந்த் நீளமான தாடி வளர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button