உணவுக்கான உலகின் மிகச் சிறந்த இடங்கள் பட்டியலில் இடம்பிடித்த இந்திய நகரம்
இந்த ஆண்டு (2023) உணவுக்கான உலகின் மிகச் சிறந்த இடங்கள் பட்டியலில் இந்திய நகரமான கொல்கத்தா இடம்பிடித்துள்ளது.
Eater எனும் இணையத்தளம் வெளியிட்டுள்ள அப்பட்டியலில் மொத்தம் 11 இடங்கள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில் கொல்கத்தாவும் ஒன்று என NDTV செய்தி நிறுவனம் தெரிவித்தது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள இதர சில இடங்கள்:
* தமாக்கி மகாவ்ராவ், நியூசிலந்து (Tamaki Makaurau, New Zealand)
* எஷ்வில், வட கரோலைனா (Asheville, North Carolina)
* கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து (Cambridge, England)
* டாக்கார், செனகல் (Dakar, Senegal)
* சர்டினியா, இத்தாலி (Sardinia, Italy)
* மணிலா, பிலிப்பீன்ஸ் (Manila, Philippines)
உணவுக்கான உலகின் மிகச் சிறந்த இடங்களைத் தேர்ந்தெடுப்பதில் அவசியம் ருசித்துப் பார்க்கவேண்டிய உணவுகள் மட்டுமல்லாமல் அந்த உணவுகளின் சிறப்பம்சங்களும் ஆராயப்பட்டன.
மக்கள், சுற்றுச்சூழல், கலாசாரம், உணவுகளின் பின்னணி ஆகியவையும் கருத்திற்கொள்ளப்பட்டன என்று அந்த இணையத்தளம் தெரிவித்தது.
![]()