இலக்கியச்சோலை

கோல்டன் குளோப் விருது மூலம் தென்னாட்டு இசைக்கு உலகப் பெருமை பெற்றுத் தந்துள்ள கீரவாணி, ராஜமவுலிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து..!!

கோல்டன் குளோப் விருது மூலம் தென்னாட்டு இசைக்கு உலகப் பெருமை பெற்றுத் தந்துள்ள கீரவாணிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து கூறியுள்ளார். RRR படத்தின் இயக்குநர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணிக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து கவிஞர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில்,

விருது மூலம்
தென்னாட்டு இசைக்கு
உலகப் பெருமை
பெற்றுத் தந்திருக்கும்
அருமை நண்பர்
கீரவாணி

இயக்குநர்
ராஜமவுலி

இருவருக்கும்
என் வாழ்த்தும் பாராட்டும்

மெளலி என்றால் கிரீடம்
இந்தியாவுக்குக் கிரீடம்
சூட்டிவிட்டார் ராஜமெளலி

மகுடத்தின் மீது
பூக்கள் எறிகிறேன்

என்று கவிஞர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *