நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது…!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. வரும் 12-ம் தேதி ரிலீஸ் ஆகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’, ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில், வாரிசு படத்தின் டிரைலர் இன்று (புதன்கிழமை) வெளியாகிறது. மாலை 5 மணிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிரைலர் வெளியீடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும், ஆர்வத்திலும் உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button