அஜித்துக்காக விட்டுக் கொடுத்தாரா விஜய் துணிவு ரெயிலர் 23 மில்லியனை கடந்தது!
அஜித்தின் துணிவு பட ரெயிலர் வெளியாகி குதிரை வேகத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது. 15 மணி நேரத்தில் எல்லாம், 20 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து விட்டார்கள். ஜனவரி 1ம் திகதி விஜய் நடித்த வாரிசு பட ரெயிரல் வெளியாக இருந்தது. ஆனால் அதனை சற்று தள்ளி வைத்துள்ளார் விஜய். இதன் காரணத்தால் துணிவு மற்றும் வாரிசு ரெயிரலர்கள் ஒன்றாக வெளிவந்து பெரும் மோதலை ஏற்படுத்தவில்லை. மேலும் சொல்லப் போனால்…
இந்த விடையத்தில் நடிகர் விஜய் சற்று விட்டுக் கொடுத்துள்ளார் என்று தான் கூறவேண்டும். இன்னும் சில தினங்கள் கழித்தே விஜயின் வாரிசு திரைப்பட ரெயிலர் வெளியாக உள்ளது. இதற்கு பலமான வரவேற்ப்பு காத்திருக்கிறது. காரணம் என்னவென்றால், வாரிசு பட ரெயிலரை விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல…
அஜித் ரசிகர்கள் கூட பார்பார்கள், ஏன் என்றால் அதில் உள்ள குறை நிறைகளை கண்டுபிடிக்க வேண்டும் அல்லவா . அப்படி என்னால் தானே கலாய்க்க முடியும். ஒட்டு மொத்தத்தில் பொங்கல் அன்று பெரும் வாண வேடிக்கை தான் போங்கள்
![]()