மனதை உலுக்கும் அழுத்தமான படைப்பு.. ‘கொடுவா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சுரேஷ் சாத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கொடுவா’. இந்த படத்தில் கதாநாயகனாக நிதின் சத்யா நடித்துள்ளார்.

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நிதின் சத்யா. இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை -28 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் ‘கொடுவா’ படத்தில் நடித்து வருகிறார்.

‘பேச்சுலர்’ படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

துவாரகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தரண் குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கொடுவா’ திரைப்படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டனர். தற்போது இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button