விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

வரும் 12-ம் தேதி ரிலீஸ் ஆகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’, ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. அதேபோல், படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாரிசு படத்தின் புதிய போஸ்டர் புத்தாண்டான இன்று 12 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. ‘தி பாஸ் ரிட்டன்ஸ்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய போஸ்டரில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button