ஜி 7 நாடுகள், அவுஸ்ரேலியா மற்றும் ஜரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஆப்பு வைத்தார்…… ரஷ்ய ஜனாதிபதி!
உலகில் சவுதி அரேபியாவுக்கு அடுத்ததாக எண்ணை ஏற்மதியில் காணப்படும் நாடு ரஷ்யா, இதன் ஏற்றுமதியானது உலக சந்தையில் பெரும் பங்கு வகிக்கின்றது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமான ஜி 7 நாடுகள், அவுஸ்ரேலியா மற்றும் ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்ததுடன், ரஷ்யாவின் எண்ணை ஏற்றுமதிக்கு விலைநிர்ணய கட்டுப்பாட்டினை விதித்ததன.
இதற்கமைவாக, ரஷ்ய ஜனாதிபதி அதிரடி உத்தரவினை ஜி 7 நாடுகள், அவுஸ்ரேலியா மற்றும் ஜரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு விதித்துள்ளார், அதாவது விலைவரம்பை விதித்த மேற்கூறிய நாடுகளுக்கு எண்ணை உற்பத்திகள் விற்பனை செய்யப்படமாட்டாது என அறிவித்தார், அத்துடன் இவ் தடையானது எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி தொடக்கம் ஜீலை 01 ஆம் திகதி வரை இருக்கும் என ஜனாதிபதி தெரிவித்தார். ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சியில் மேற்கூறிய நாடுகளின் பங்களிப்பானது மிக உயர்வாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
![]()