செய்திகள்

“எரிந்த முடி நாற்றம்” – இப்படியும் ஒரு வாசனைத் திரவம்…

Burnt Hair – என்ற ஆங்கிலப் பெயரில் எரிந்த முடி நாற்றம் கொண்ட புதிய வாசனைத் திரவம்…

அதுபற்றி செப்டம்பர் மாத இறுதியில் Twitter பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார் செல்வந்தர் இலோன் மஸ்க்.

அவ்வளவுதான்… அப்போதிருந்து மிக விரைவில் அந்த வாசனைத் திரவம் விற்று முடிந்துவிட்டது.

The Boring Company எனும் நிறுவனம் அதன் Burnt Hair வாசனைத் திரவத்தை 300,000 போத்தல்களில் விற்று முடித்ததாகத் தகவலை வெளியிட்டது.

ஒரு போத்தலின் விலை… 100 டாலர்.

அந்த வாசனைத் திரவம் அடுத்த ஆண்டில் விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அவற்றை முன்கூட்டியே வாங்கியவர்களில் பலர், அவற்றை இணைய விற்பனைத்தளங்களில் கூடுதல் விலையில் மறுவிற்பனை செய்கின்றனர்… வாசனைத் திரவம் கையில் கிடைப்பதற்கு முன்னரே.

ஒரு சிலர் 10,000 டாலர் வரை அதன் விலையைக் கூட்டி மறுவிற்பனை செய்வதும் தெரியவந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *