சங்கமம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: பிரபல இந்திய வீரர் விலகல்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் தீபக் ஹூடர் விலகிய நிலையில், அவருக்குப் பதில் பிரபல வீரர் ஷ்ரேயாஷ் அய்யர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள தென்னாப்பிரிக்க அணி வரும் 28 ஆம் தேதி முதல், அக்டோபர் 2 ஆம் தேதி வரை போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாட உள்ளது.

முதல் போட்டி, 28 ஆம் தேதி திருவனந்தபுரத்திலும், அக்டோபர் 2 ஆம் தேதி 2 வது போட்டி: கவுகாத்தியிலும், அக்டோபர் 4 ஆம் தேதி 3 வது போட்டி: இந்தூரிலும் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் ஹூடா இத்தொடரில் இருந்து விலகியுள்ளார், அவருக்குப் பதில், ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

மேலும், ஹர்த்திக் பாண்ட்யாவுக்குப் பதில், ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *