நர்சிங் ஹோமில் வயதானவர்கள் முன் ஆட்டம் போட்ட அழகி – வலுக்கும் கண்டனம்

தைவானில் உள்ள நர்சிங் ஹோம் ஒன்றில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் வயதான நோயாளிகள் மத்தியில் நடன அழகி ஒருவர் ஆபாசமாக நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தைவான் நாட்டில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்காக அரசு சார்பில் நர்சிங் ஹோம் நடத்தப்படுகிறது. இங்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தைவானில் உள்ள நர்சிங் ஹோம் ஒன்றில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் வயதான நோயாளிகள் முன்னிலையில் நடன அழகி ஒருவர் ஆபாசமாக நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் நடன அழகி ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் நோயாளிகளை தொட்டுத்தொட்டு ஆபாசமாகவும், முகம்சுளிக்கும் வகையிலும் நடனமாடுகிறார். இதனை பார்த்த சில நோயாளிகள் கூனிக்குறுகி உட்கார்ந்திருந்தனர். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை ஷேர் செய்த பலரும் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நர்சிங் ஹோம் பொறுப்பாளர்கள் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். வயதான நோயாளிகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே இதனை ஏற்பாடு செய்ததாகவும் பார்வையாளர்களுக்கு நெருடலை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம் எனவும் நர்சிங் ஹோம் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button