மாமிசத்தை விளம்பரம் செய்வதற்குத் தடை விதிக்கும் முதல் நகரம்

சிகரெட்டுகளுக்கு அல்லது மதுபானங்களுக்கு விளம்பரம் செய்வதற்குத் தடை விதிக்கப்படுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்…

நெதர்லந்தின் ஹார்லம் (Haarlem) நகரம் வித்தியாசமாக மாமிச விளம்பரங்களுக்குத் தடை விதிக்கவுள்ளது.

2024- ஆம் ஆண்டிலிருந்து பேருந்துகள், ஓய்விடங்கள், திரைகள் ஆகியவற்றில் விளம்பரம் செய்யமுடியாது. அது குறித்து அண்மையில் விளம்பர அமைப்புகளுக்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இறைச்சிப் பொருள்கள் ஏற்படுத்தும் பருவநிலைத் தாக்கத்தைக் கருத்தில்கொண்டு அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

உலகில் இறைச்சிப் பொருள்களை விளம்பரம் செய்வதற்குத் தடை விதிக்கும் முதல் நகரம் அதுவே என்று கூறப்படுகிறது.

நகரில் ஏற்கெனவே விமானப் பயணம், பெட்ரோலில் இயங்கும் கார்கள் ஆகியவற்றுக்கான விளம்பரங்களுக்குத் தடை உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button