‘பாசத்துல நம்மள மிஞ்சிருவாங்க போலையே’ -இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய ஆப்கன் ரசிகர்கள்

ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியபோது, அதனை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. இதன் மூலம், கடந்த ஆண்டு டி20 உலக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த வெற்றியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியபோது, அதனை ஆப்கானிஸ்தான் நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடந்தபோது ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் பலர் இந்திய அணிக்கு ஆதரவாக இருந்தனர். இந்திய அணி வெற்றி பெற்றபோது அவர்கள் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தனர். இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் பாகிஸ்தான் அணியை, இந்தியா வீழ்த்தியபோது டிவியில் வந்த ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்கானிஸ்தான் ரசிகர் ஒருவர் முத்தமிட்டு கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

‘பாசத்துல நம்மள மிஞ்சிருவாங்க போலையே’ என நம் நாட்டு ரசிகர்கள் வியக்குமளவுக்கு இந்திய அணியின் வெற்றியை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button