நூறாவது கொள்ளுப் பேரக் குழந்தையை பார்த்த 99 வயது பெண்!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிப்பவர் மார்க்ரெட் கோல்லர்,99. கடந்த 1924ல் பிறந்த இவர், வில்லியம் பால்ஸ்டர் என்பவரை திருமணம் செய்து ௧௧ குழந்தைகளை பெற்றார். தற்போது 99 வயதை நிறைவு செய்துள்ள மார்க்ரெட் அடுத்த சில மாதங்களில் 100 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

இந்நிலையில் அவருக்கு கடந்த 4ம் தேதி 100வது கொள்ளுப் பேரன் பிறந்துள்ளான். அந்தக் குழந்தைக்கு கோல்லர் வில்லியம் பால்ஸ்டர் என்று தன் கணவர் பெயரையே சூட்டியுள்ளார். மார்க்ரெட்டுக்கு 56 பேரன், பேத்திகளும், 100 கொள்ளுப் பேரன், பேத்திகளும் உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button