காதலில் மோசடி; காதலனை வினோத முறையில் தண்டித்த காதலி

பழங்காலம் தொட்டு இன்று வரை காதலிலும், காதலிப்பவர்களும் இருந்து வருகின்றனர். எனினும், அவர்களில் ஒருவர் நம்பிக்கை மோசடி செய்யும்போது, மற்றொருவர் புண்படுகிறார். ஆறாத ரணம் தழும்பு ஏற்படுத்தி விடுகிறது. சிலர் அமைதியாகி விடுகின்றனர். ஒரு சிலர் சிறிது காலம் கழித்து, அதில் இருந்து மீண்டு வருகின்றனர்.

சிலர் பழிவாங்கும் போக்கிலும் ஈடுபடுகின்றனர். ஆனால், காதலில் இருந்த ஆண் ஒருவர் நம்பிக்கை மோசடி செய்தது பற்றி அறிந்த காதலி ஒருவர் தனது காதலனுக்கு வினோத தண்டனையை அளித்து இருக்கிறார். இதன்படி, உள்ளூரில் இருந்து வெளிவரும் மெக்கே அண்டு விட்சண்டே லைப் என்ற பத்திரிகையில் காதலி ஒரு விளம்பரம் கொடுத்து இருக்கிறார். காதலன் தன்னை ஏமாற்றி விட்டார் என்று அறிந்த ஜென்னி என்ற பெயர் கொண்ட அந்த காதலி, பத்திரிகையில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், டியர் ஸ்டீவ். நீ, அவளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாய் என நம்புகிறேன்.

நீ எப்படிப்பட்ட மோசடி பேர்வழி என்று தற்போது ஒட்டுமொத்த நகரத்திற்கும் தெரிய வரும் என தெரிவித்து உள்ளார். பத்திரிகையின் 4-ம் பக்கத்தில் வெளியான விளம்பரத்தின் கீழே குறிப்பு ஒன்றும் உள்ளது. அதில், இந்த விளம்பரம் உன்னுடைய கிரெடிட் கார்டு உதவியுடனேயே பிரசுரிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புகைப்படம் அடங்கிய விளம்பர தகவலை தனது பேஸ்புக்கில், அந்த பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதில், விளம்பர தகவலுக்கு பலரும் பதிலளித்து வருகின்றனர்.

எங்களுக்கு ஸ்டீவ் எவரென தெரியாது. ஆனால், மிக மிக மோசம் வாய்ந்த ஆள் அவரென்று தெரிகிறது. ஜென்னியை பற்றிய எந்த தகவலையும் நாங்கள் வெளியிட போவதில்லை என தெரிவித்து உள்ளனர். இந்த பேஸ்புக் பதிவிற்கு 3 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். பலர் விமர்சனங்களை அள்ளி விடுகின்றனர். ஒருவர், எனது நோக்கமும் இதேபோன்று இருந்தது என கூறியுள்ளார். மற்றொருவர், நான் ஜென்னியின் பக்கமே இருக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button