சங்கதிகள்

பிரதமர் மோடி சொன்னதை கேட்கும் லாலுவின் மகன் தேஜஸ்வி!

பிரதமர் நரேந்திர மோடி சொன்னதைக் கேட்டு, உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், 32.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.சமீபத்தில் சட்டசபையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது தேஜஸ்வி யாதவை சந்தித்துப் பேசினார். ‘உடல் எடையை குறையுங்கள்’ என மோடி ஆலோசனை வழங்கினார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான தேஜஸ்வி உடனே அதற்கான முயற்சியில் இறங்கினார். சமீபத்தில் தன் வீட்டில் சிலருடன் அவர் கிரிக்கெட் விளையாடும் ‘வீடியோ’ வெளியானது. இந்நிலையில், புதிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், டிரைவருடன் கூடிய ஜீப் ஒன்றை, அவர் சில அடி துாரம் இழுத்தும், தள்ளியும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *