சங்கதிகள்

மாற்றுத்திறனாளிகள் பிச்சை எடுக்கும் போராட்டம்

அம்பேத்கார் மாற்றுத் திறனாளிகள் புரட்சி இயக்கம் சார்பில் சமூகநலத்துறை நுழைவு வாயில் முன்பு பிச்சையெடுக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு இயக்கத்தின் தலைவர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் பாலசுப்பிரமணியன், ராஜதுரை, செயலாளர் அந்தோணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணை செயலாளர்கள் லட்சுமணன், கார்த்திகேயன், பொருளாளர் சுவாமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர். மாதாந்திர உதவித்தொகையை பிரதிமாதம் 7-ந் தேதி வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளி பிரதி நிதிகள் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். 4 சதவீத வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். மேம்பாட்டுக்கழகத்தில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். குடியிருப்பில் 5 சதவீதம் ஒதுக்க வேண்டும். மருத்துவ சான்றிதழை சமூகநலத்துறை அலுவலகத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. கையில் தட்டேந்தி பொதுமக்களிடம் பிச்சையெடுத்தனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *